Tuesday, 23 September 2008

தலைப்பிட மறந்தது

துளித்துளியாய் வளர்ந்த தேனடை வசந்தத்தை ஆயிரம் கூட்டு கண்கள் கொண்ட பார்வையின் தேடல் தரிசனம் அது சுவைக்க மட்டுமே உனக்கு தரப்பட்டது செவ்வி அறிய தலைப்பட்டிருக்கலாம் . ஏனோ உனக்கது வசப்படுவதில்லை வெயில் வளர்த்த பாலையின் வெட்ட வெளியில் கொட்டிப்பார்த்தாய் உனக்கது சோதனை முயற்சி தகிப்பதோ என் அந்தரங்கம் .