ஓடிக்கொண்டிருக்கும்
கோதாவரி
அதன் மீது
இருள் அடர்ந்து கிடக்கும்
இரவு
வண்டல் இறைக்க
வழியில்லாமல்
கரைகளுக்குள்
அடைபட்டுப்போன
கைதி நதி
ஆற்றுக்குள்
சிறைபட்டுப்போன
ஓடங்கள்
இக்கரைக்கும்
அக்கரைக்குமாக
வாழ்வை,
குதூகலத்தை ,
புலம்பல்களை
என
கரைசேர்ப்பதிலேயே
அமிழ்ந்து போகும்
அவற்றின் வாழ்க்கை
கணந்தோறும்
புதுப்பித்துக்கொள்ளும்
ஒரு நதி
கரை சேர்க்கும்
ஒரு ஓடம்
தடம் இல்லா வழி
என்றாலும்
ஆதிமனித ஒர்மயிலிருந்து
இன்றுவரை மாறாத
தொடர் பயணங்கள் .