எங்கோ நுணுக்கமான மூலையில்
முளை விட்டு ,
ராப்பகல், அந்தி, இருள்
எல்லாவற்றிலும் கூடவேவந்து,
உத்தேசமாய் ஒரு நோவாக
உருவெடுத்து ,
தன்னிலை இழந்து
உணர்வெல்லாம் ஓரிடம் பாய
சஞ்சலமும், நம்பிக்கையும்
ஒரே சமயத்தில் வதைத்தாலும்
மனம் மீண்டும் மீண்டும்
அதையே மோகிக்கும்.
என்றாலும்
அத்தனை அவஸ்தையையும்
ஒரு கணத்தில்
பேரின்பம் ஆக்கிக் காட்டும்
அந்த மூன்றெழுத்து.
வெற்றி !!!