Monday 31 March, 2008

அனந்தம்

வெகுகாலைப்பொழுது வரப்போகும் வெளிச்சத்துக்கு 
இரவெல்லாம் 'வந்துவிடும்' 'வந்துவிடும்' என ஒலிக்கும் ராப்பூச்சி.
ஒவ்வொரு சுழற்சியிலும் சூரியனை புரட்டி விட்ட திருப்தியில் புரண்டு ஓடும் பூமி. 
மல்லிக்கும் தாமரைக்கும் தர்க்க வாதம் இடைப்பட்ட நேரம் உனக்கா? எனக்கா? 
விடியலையும் ,எழுச்சியையும் மட்டுமே காணும் புரட்சிகள். 
மறைவதும் ,விழுவதும் அதே ஆதவன்தான். 
எட்டாப் பொருளுக்கு எத்தனையோ உடமைக்காரர்கள் . 
இதெல்லாம் சூரியனுக்குத் தெரியுமா?
தெரிந்தாலும் அபத்தம். 
வாழ்வும் அப்படியே ! வருவதும் இல்லை !! போவதும் இல்லை !!!