உன்
உறவுதிர்ந்த காலம் அது .
நன்றாய் நினைவிருக்கிறது
உதிரும் உறவு
கிழித்த வலி
அறியமாட்டா உன்
விலகிச்சென்ற வேர்கள் .
தனித்தும், தொலைந்தும்
தொலைவிலும்
நின்ற நான்.
இழப்பென்பது தனிமை.
அடைக்குள்ளே
உடைந்துபோன
பறவையின் ஓலம்
மழையின்றி
மண்ணான
பயிரின் ஓலம்
இதில் எத்தனை நீ அறிவாய்?
அதனால் சொல்கிறேன்
இழப்பு தனிமை.
இழக்காதவரை
தனிமை தெரிவதில்லை.